கோபியர்கள்டைய கோதில்லாத மனதை முற்றிலும் கொள்ளை கொன்டுபொய்விட்ட கோமளன் கண்ணன். அன்புக்கடவுள் என்று அவர்கள் கண்ணனை வணங்கினார்கள். கண்ணனை தவிர வேறு கடவுளை அவர்கள் கனவிலும் கருதியது கிடையாது. தங்கள் உயிருக்கு உயிராய் தங்கள் உள்ளத்தில் ஊற்று எடுத்து வரும் அன்புக்கு இலக்காய் கோபியர் கண்ணனை கருதி வந்தனர்.
கடவுளை அடைய தகுதியுள்ளவர் யார் என்ற கேள்விக்கு முனிவர்களுக்கு கிடைத்த முடிவு ஒன்றேதான். பிருந்தாவனத்தில் வசித்து வந்த கோபியர்களுடைய களங்கமற்ற உள்ளமும் தூய அன்பும் யாருக்கு வந்து வாய்க்குமோ அந்த பாக்கியவான் பகவானை எளிதில் பெற்று தனக்கு சொந்தமாக்கி கொள்வான் என்பதே அவர்கள் முடிவு.
4 comments:
தோழி, என்ன ஆயிற்று, நீண்ட நாட்களாக இடுகையே காணவில்லை. சீக்கிரம் வாருங்கள். ராமர் நாமம் பாடுவோம்.
தங்கள் அன்புக்கு நன்றி..ஜெகதீஷ்..
எனது இஷ்ட தெய்வத்தோடு கொஞ்சம் வருத்தம்,. அதனால் தான் எழுதவில்லை.. (கடவுளோடு கோபப்பட முடியாதல்லவா?)
எனினும் ராம நாமம் சொல்லாமலிருப்பதும், கிருஷ்ணர் கதைகள் வாசிக்காமலிருப்பதும் மிகவும் கடினம்தான்..
உங்கள் புதிய பதிவுகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
கிருஷ்ண ஜெயந்தி முதல் தொடரவேண்டும்...
வருக்கைக்கு நன்றி ..ஜெகதீஷ்..
கடவுளோடு உரிமையாய் கோபப்படலாம், அவரிடம் கோபப்படாமல் வேறு யாரிடம் கோபப்படுவது. அந்த கோபத்திலும் அன்பு இருக்க வேண்டும். அவர் எது செய்தாலும் நமது நன்மைக்காக தான் இருக்கும். வருத்தம் வேண்டாம். ஜெய் ஸ்ரீ ராம்.
//கடவுளோடு உரிமையாய் கோபப்படலாம், அவரிடம் கோபப்படாமல் வேறு யாரிடம் கோபப்படுவது//
சரியாகச் சொன்னீர்கள் ஜெகதீஷ்..
கடவுளோடு கோபப்படுவது ஒரு பக்தனின் உரிமை..
அன்பு இருப்பதனால்தான் கோபமும் வருகிறது. வருத்தமும்.
ஸ்ரீ ராம நாமம் சொல்பவர்களுக்கு ராமர் நன்மையைத்தானே செய்வார்..
தங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி..
ஜெய் ஸ்ரீ ராம்.!
Post a Comment