December 13, 2009

அனுமான் ஜெயந்தி



சிரஞ்சீவி அனுமான் வாயு தேவனுக்கும் அஞ்சனா தேவிக்கும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் மகனாக பிறந்தார். அஞ்சனாதேவியின் மகன் என்பதால் அஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார்.

ஆஞ்சநேயருக்கு வாயு புத்திரன், மகா பவிஷ்டன், அர்ஜுனசகன் என்று பல பெயர்கள் உண்டு.

அனுமான் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவு அருந்தாமல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு வடை மாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணை சாத்தி வழிபடவேண்டும்.

2 comments:

ramesh sadasivam said...

அனுமன் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் திலகா

Thilaga. S said...

நன்றி..உங்களுக்கும் வாழ்த்துக்கள்..