April 4, 2010

வறட்டிகள் எழுப்பிய விட்டல் நாமம்.

(கிருஷ்ண பக்தை – ஜனாபாய்)
பண்டரிபுரத்தில் நாமதேவரின் இல்லத்தில் எப்போதும் பாண்டுரங்கனின் மகிமை பாடப்பட்டுவந்தது. நாமதேவரின் புதல்வி ஜனாபாய் பாண்டுரங்கனிடமும் அவரது அடியார்களிடமும் மிகுந்த பக்தியோடு சேவை செய்து வந்தாள்.

அன்று கீர்த்தனை முடிந்ததும் பாகவதர்களுக்காக உணவு சமைக்க ஜனாபாய் இல்லத்திற்கு விரைந்து வந்தாள். அடுப்பிற்காக வைத்திருந்த வறட்டிகளை அடுத்த வீட்டுக்காரி அபகரித்திருந்தது அவளுக்கு தெரிந்தது. ஜனாபாய் வறட்டிகளைக் கேட்க அந்த பெண் மறுக்க இருவருக்குள்ளும் வாய்ச் சண்டை வந்துவிட்டது. அங்கு வந்த நாம தேவர் அதிர்ச்சி அடைந்தார்.

"உன் வறட்டிகளை நான் எடுக்கவில்லை" என்று அந்த பெண் மறுக்க, "இல்லை நீதான் எடுத்திருக்கிறாய், அதை நான் நிரூபிப்பேன்" என்று ஜனாபாய் தந்தையிடம் உரைத்தாள்.

அடுத்த வீட்டிலிருந்து எல்லா வறட்டிகளும் கொண்டுவரப்பட்டன. ஜனாபாய் இறைவனிடம் "பாண்டுரங்கபிரபு, தீன தயாளா, அடியார் தொண்டில் ஈடுபடும்போதும், வறட்டி தட்டும்போதும் 'விட்டல், விட்டல்' என்று உன் நாமத்தை நான் ஜெபிப்பது உண்மையானால் நீ அதை நிரூபித்து அருள வேண்டும்" என்று வேண்டினாள்.

ஜனாபாய் வறட்டிகளை ஒவ்வொன்றாக கீழே போட்டார். ஜனாபாயின் வறட்டிகள் 'விட்டல், விட்டல்' என்ற திருநாம ஒலியுடன் கீழே விழுந்தன. மற்றவை வெறும் சத்தத்தை மட்டும் எழுப்பின.

கூடியிருந்த மக்கள் "ஆஹா என்னவோர் அற்புதம், ஜனாபாயின் வறட்டிகள் கூட விட்டலின் நாமத்தை கூறுகின்றனவே" என்று வியந்தனர்.



ஜெய், பாண்டுரங்க விட்டல் பிரபு கீ ஜெய்!


ராம கிருஷ்ண மிஷனின் "கதை மலர்" புத்தகத்திலிருந்து.

11 comments:

ramesh sadasivam said...

ஆஹா. ஆனந்தம் தரும் பதிவு. பகிர்தலுக்கு நன்றி.

பாண்டுரங்க பக்த விஜயம் கதைகளை தொடர்ந்து எழுந்துங்கள். ஒவ்வொன்றும் அற்புதம்.

Thilaga. S said...

தங்களின் வருகைக்கும் அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி.

ராம, கிருஷ்ண பக்தர்களின் கதைகளை தேடி, படித்து வலைப்பூவில் போடவேண்டுமென்று நினைக்கிறேன்.

Anonymous said...

ஆஹா..அருமைங்க..தொடர்ந்து எழுதுங்க..

Rajewh said...

அருமை.. மிக்க நன்றி

பாண்டுரங்க விட்டலே ஹரி நாராயண!!

Thilaga. S said...

# Ammu madhu

நன்றி அம்மு..
தங்களின் வருகைக்கும் ஊக்கமளிக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

Thilaga. S said...

# Sri Kmalakanni amman temple

ஹரி நாமத்துடன் பாராட்டியதற்கு
மிக்க நன்றி ராஜேஷ்..

Thilaga. S said...

#Shri RAMesh
தங்களின் வருகைக்கும் அருமையான கருத்துக்கும் மிக்க நன்றி ரமேஷ்!

ராம, கிருஷ்ண பக்தர்களின் கதைகளை தேடி, படித்து வலைப்பூவில் போடவேண்டுமென்று நினைக்கிறேன்!

jagadeesh said...

உங்கள் வலைப்பதிவு மிகவும் அருமையாக இருகின்றது.எனக்கு மிகவும் பிடித்தவர் ஸ்ரீ ராமர்.
என்னுடைய ஞான தேடல்களுக்கு உங்கள் வலைத்தளம் உபயோகமாக இருக்கிறது, மிக்க நன்றி.

Thilaga. S said...

தங்களுடைய கருத்துக்கு மிக்க நன்றி ஜெகதீஷ்..

இணையத்தில் ஸ்ரீ ராம பக்தர்களின் வலைப்பதிவுகளை வாசிப்பது எனக்கும் பிடித்தமானது..

ஸ்ரீ ராமரைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் எனக்கு கிடைப்பதும், ஸ்ரீ ராம பக்தர்கள் எனது வலைதளத்திற்கு வருவதும்கூட, ஸ்ரீ ராமரின் திருவருளே என்று நினைக்கிறேன்..

Also visit this blogs(created by devotees of Lord Ram)

http://iamhanuman.blogspot.com/

http://www.ramayanainfo.blogspot.com/

ஜெய் ஸ்ரீ ராம்..!

Radha said...

அற்புத பக்தி. பகிர்விற்கு நன்றி.

Thilaga. S said...

தங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஜெய் ஸ்ரீ ராம்!