"பலனுக்கு ஆசைப்பட்டு செயல்படாதே. விளைவுக்கு பயந்து செயல்படாமலும் இருந்து விடாதே. எது நீ செய்ய வேண்டிய கடமையோ அதனை சிந்தையில் குழப்பமின்றி செய்.
உன்னைச் சேர வேண்டிய பலன் உன்னை வந்து சேரும். அப்படி பலன் கிடைத்தபோதிலும் அதனால் நீ பாதிப்புக்குள்ளாகிவிடாதே. ஏனெனில் உன்னை ஒரு கருவியாக வைத்து யாமே செய்கிறோம்.
எவன் ஒருவன் தன்னை ஒரு கருவியாக மட்டுமே பாவித்துக்கொன்டு செய்ய வேண்டிய கடமையை சஞ்சலமின்றி செய்கிறானோ அவன் பாவ புன்னிய தளைகளிலிருந்து விடுபடுகிறான்.
அந்த ஸ்திதப்ரக்ஞன்(நிலை மனதினன்) புனரபி ஜனனம், புனரபி மரணம்(மீண்டும் பிறப்பு, மீண்டும் இறப்பு) என்ற சுழற்சியிலிருந்து விடுபட்டு என்னை அடைகிறான்".
3 comments:
"விளைவுக்கு பயந்து செயல்படாமலும் இருந்து விடாதே", இதில் எதை குறிக்கிறார்?.இதன் அர்த்தம் என்ன? ஒரு விளக்கம் கொடுங்கள்
அர்ச்சுனன் போருக்குபின்னர் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எண்ணி அச்சம்கொண்டு , போரில் தன் கடமைகளை செய்ய முடியாமல் குழப்பம் அடைந்தபோது ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்துச் சொன்ன அறிவுரைதான் இது..
...............................
"உனக்கென அமையும் வினையே புரிக."
- அத்(3,8)
"என்றும் பற்றே அற்றுத்
திறனோடு புரிக நல்வினையே
பற்றே அற்று வினையே புரிவோன்
மேலாம் பெறுநிலை எய்திடுவான்"
- அத்(3,19)
...............................
வருகைக்கு மிக்க நன்றி ஜெகதீஷ்.
Post a Comment