March 30, 2010

பகவத் கீதை - எல்லா மதத்தினருக்கும்

பகவத் கீதையில் எல்லா மதத்தினரும் பின்பற்றக் கூடிய நிறைய கருத்துக்கள் இருக்கின்றன.

ஒருவர் எவ்விதமான உணவை உட்கொண்டால் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்று 17 வது அத்யாயத்தில் சொல்லப்பட்டுள்ளது.

"ஆயுள், ஸத்துவம், சக்தி, சுகமும்
குன்றா நலனும் உடல் வலிவும்
இன்மை, கனிவு, இவற்றை நல்கும்
உணவே ஸாத்விகர் நாடுவதாம்"
- கீதை(17,8)

மேலும் கசப்பு, புளிப்பு, காரம் மிகுதியாக சேர்க்கப்பட்ட உணவு ராஜச குணத்தை தரக்கூடியதாகும் என்று அத்(17,9) ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

மிகையாக உண்பவரும், உணவே இல்லாமல் இருப்பவரும், தூக்கமும், விழிப்பும் மிகுதியாக உள்ளவர்களும் யோகம் தனை எய்தார் என்று அத்(6,16) வது ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

"அளவாய் உண்டு உடலைப் பேணி
கர்மம் சீராய்ச் செய்திடுவோன்
தூக்கம் விழிப்பு மிதமாய் உள்ளோன்
செய்யும் கர்மம் துயர் நீக்கும்".
-அத்(6,17)


இதனால்.,
மிதமான விழிப்பு, மிதமான தூக்கம்,
மிதமான உரைப்பு, புளிப்பு, கசப்பு சேர்ந்த உணவு
இவையே மனதுக்கும், உடலுக்கும் ஆரோக்கியம் தந்திடும் என்று நாம் கீதையிலிருந்து அறிந்து கொள்ளலாம்..

6 comments:

Anonymous said...

arputham.

Thilaga. S said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அம்மு..

jagadeesh said...

மிகவும் பிடித்தது, நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் இந்த புண்ணிய தேசத்தில் பிறக்க

Thilaga. S said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..ஜெகதீஷ்..

goma said...

கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பது மட்டும்தான் கீதை என்று பலரோடு சேர்ந்து நானும் நினைத்துக் கொண்டிருந்தேன்...கீதை ஒரு பாற்கடல்...என்பதை அறிந்தபின் மூழ்கி முத்தெடுக்க ஆசைப் படுகிறேன்
தங்கள் வலைப்பூ எனக்குள் அந்த எண்ணத்தை வரவழைத்து விட்டது நன்றி

Thilaga. S said...

தங்களுடைய வருகை எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது..உங்கள் வலைதளத்தில் உள்ள வினாயகர் படங்கள் அனைத்தும் அற்புதம்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..