April 9, 2010

பக்தரின் வாதநோய் நீக்கிய குருவாயூர் கிருஷ்ணர்.


ஸ்ரீ மேல்புத்தூர் நாராயண பட்டதிரி என்ற நம்பூதிரி பிராமணர் பாரதபுழை என்ற நதியின் வடகரையில் திருநாவா என்ற ஷேத்திரத்திற்கு சமீபத்தில் பிறந்தார். இவரது தந்தை மாத்ருதத்தர் என்ற மகா பண்டிதர். பட்டத்திரி சிறுவயதில் தந்தையிடமே கல்வி பயின்றார்.

ஒருசமயம் அவருடைய வியாகரண குருவான அச்யுத பிஷாரடி வாத நோயால் பீடிக்கப்பட்டு வருந்தியபோழுது பட்டதிரி அவருக்கு சேவை புரிந்தார். அவருடைய நோயையும் யோகபலத்தால் தானே ஏற்றுக்கொண்டு அங்கங்கள் முடங்கியவரானார்.

குருவாயூரில்போய் தவம்புரிய நிச்சயித்து தன்னை அங்கு எடுத்து போகச் செய்து நாள்தோறும் பத்து சுலோகம் பாடலானார்.நூறு நாட்களில் பாடிமுடித்தபொழுது பகவான் ஸ்ரீகிருஷ்ணருடைய திருவருளால் நோயிலிருந்து விடுபட்டார்.
(நாராயண பட்டதிரி எழுதிய "ஸ்ரீமந் நாராயணீயம்" ஸ்ரீமத் பாகவதத்தை 1036 சுலோகங்களில் சுருக்கி வருணிக்கிறது)

8 comments:

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

தாங்கள் அடியேனின் வலைக்குடிலுக்கு வருகை தந்து கருத்துக்கள் கூறியது கண்டு மிக்க மகிழ்வுற்றேன். தங்கள் வலைப்பதிவுகளையும் படித்து அகமகிழ்ந்தேன். நன்றி.
www.natarajadeekshidhar.blogspot.com

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

ஆண்டாள் பற்றி அடியேன் எழுதிய கட்டுரையைப் படித்தீர்களா? கருத்து கூறுங்கள்.
http://natarajadeekshidhar.blogspot.com/2010/01/27-11.html

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

pl. read my new article and send your email id.
nataraja deekshidhar

Thilaga. S said...

தங்களுடைய வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

தாங்கள் எழுதியுள்ள ஆண்டாள் பற்றிய கட்டுரை அற்புதமாக இருக்கிறது.

ஆண்டாளைப் பற்றி மற்ற அழ்வார்களும் , பிற ஆன்மீக பெரியவர்களும் எழுதியவற்றையும் தொகுத்துள்ளீர்கள்..

ஆண்டாள் பாட்டில் வரும் அணிகலன்களின் பெயருக்கு சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

ஆண்டாள் இறைவனுக்கு படைத்த "அக்கார வடிசில்" செய்யும் முறையையும் கொடுத்துள்ளது சிறப்பு.

Anonymous said...

இப்படி ஒரு சம்பவத்தை கேள்விப்பட்டதில்லை.நீங்கள் போட்டுள்ள படம் அருமை.

Thilaga. S said...

தங்களுடைய வருகைக்கு மிக்க நன்றி அம்மு..

ஸ்ரீமத் நாராயணீயத்தை வாசிக்கின்ற அனைவருக்கும் இந்த கதை தெரிந்திருக்கும்..

கேரள மக்கள் அதிகமாக குருவாயூர் கிருஷ்ணரை வழிபடுவதால் அவர்களும் இதை அறிந்து வைத்திருக்கிறார்கள்..

நீங்கள் கேள்விப்பட்டதில்லை என்று எழுதியது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.. ஏனெனில் நீங்கள் பல விஷயங்களை உங்கள் வலைத்தளத்தில் எழுதியிருக்கிறீர்கள்..

jagadeesh said...

tholi, please lend your support to my another blog
http://karudapuranamtamil.blogspot.com/

Thilaga. S said...

Your new blog is also very nice..Jegatheesh.